Full width home advertisement

Latest News

Did You Know this?

Post Page Advertisement [Top]

factpost

பிடித்த கவிதை



தமிழ் கவிதை

பாமாலை : பக்தி பாடல்கள் வேதாந்தப் பாடல்கள் அச்சமில்லை [பண்டாரப் பாட்டு] அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
1 கச்சணிந்த கொங்கை மாதர்
கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே.
.

&nbsp-இயற்றியவர் பாரதியார்

எனக்குத் தெரிந்த விளக்கம்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பயமில்லை பயம் என்பது இல்லையே!
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை
துச்சமாக எண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
என்னை மதிக்காமல் என்னை அவதூறு செய்தபோதிலும் அச்சமில்லை
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
பிச்சை எடுத்து வாழவேண்டும் என்ற நிலை வந்தபோதிலும் அச்சமில்லை
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
ஆசையாக பெற்ற பொருளெல்லாம் என்னை விட்டு நீங்கிய போதிலும் அச்சமில்லை
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
பெண்களின் மாராப்பு விலகுவதைப் பார்த்த ஆண்களைக் கண்ட போதிலும் அச்சமில்லை
நச்சைவாயி லேகொணர்ந்து நண் பரூட்டு போதினும்,
விஷத்தை நண்பர் ஊட்டிய போதிலும் அச்சமில்லை
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
வேல் ஏந்திய படைவீரர்கள் வந்த போதிலும் அச்சமில்லை
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
வானமே இடிந்து விழுந்தாலும் அச்சமில்லை.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib